சகேயு



முதலாவது சகேயுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நான்காக பிரித்து நாம் கற்றுக்கொள்ளுவோம்

1. சகேயு கேள்விப்பட்டான்

2. சகேயு ஆசைப்பட்டான்

3. சகேயு பிரயாசப்பட்டான்

4. சகேயு ஆயத்தப்பட்டான்

இந்த நான்கு தலைப்பின் கீழ் நாம் இன்றைக்கு நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கப்போகிறோம்.


1. சகேயு கேள்விப்பட்டான்


முதலாவது சகேயு இயேசுவை குறித்து கேள்விப்பட்டான்.

லுூக்கா19:1
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்

மேலே உள்ள வசனத்தை பார்க்கும் போழுது இயேசுவை பற்றி கேள்விப்பட்டதினாலேயே இந்த சகேயு இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரை பார்க்க வகைதேடினான்.

இன்றைக்கு நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவை நமக்கு சொல்லக்கூடிய வேதாகம் நம் கையில் இருக்கிறது,இதன் மூலமாகவே இயேசுவைப் பற்றி நாம் கேள்விப்பட முடியும்.வேதத்தின் மகத்துவங்களை பார்க்கும் படிக்கு நம் கணகள் திறக்கப்பட வேண்டும்.இதற்கு நாம் அதிகமாக அதை வாசிக்க வேண்டும்.

நான் இப்படி நினைக்கிறேன் ஏதோ ஒரு கடைவீதியில் இயேசுவைப்பற்றி பேச்சு வந்திருக்கும்.அந்த வழியே போய் கொண்டிருந்த சகேயு நின்று இயேசுவை பற்றி பேசும் வார்த்தைகளை ஆர்வமாக கேட்டிருக்க வாய்ப்புண்டு.ஒரு வேளை அந்த பேசின நபர்களிடம் அவன் தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம் ஆனால் அவன் இயேசுவை கேள்விப்பட ஆவலுள்ளவனாக இருந்தான் என்பது வேத வசனத்தின் படி அறிந்து கொள்ளலாம்.

சகேயுவை போல நாம் அதிகமாக இயேசுவை கேள்விப்பட பரிசுத்த வேதாகமத்தை அதிகமாக வாசித்து நேசிக்க வேண்டும்.

2. சகேயு ஆசைப்பட்டான்


சகேயு இயேசுவை கேள்விப்பட்டது மட்டும் அல்லாமல் அவரை பார்க்கவும் ஆசைப்பட்டான் என்று வேதம் தெளிவாக நமக்கு சொல்லுகிறது.

லூக்கா19:3.
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்..........

இதிலிருந்து அவ்ன் இயேசுவை காணும்படி எவ்வளவு ஆசையாகவும்,விருப்பமாகவும் இருந்தான் என்பதை அறியலாம்.

நம்மில் அநேகர் இயேசுவை பற்றி அறிந்து கொள்ளுகிறோம் ஆனால் வரை அண்டிக்கொள்ளவோ ஆசைப்படுவதில்லை.

3. சகேயு பிரயாசப்பட்டான்

மூன்றாவதாக சகேயு இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டான்,பின்பு அவரை பார்க்க ஆசைபட்டான் ஆனால் அதில் பல தடைகள் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது.

லுூக்கா: 19:2
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்

லுூக்கா: 19:3
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்

முதலாவது சகேயுவின் தொழில் ஒரு தடை.மற்ற யூதர்கள் சூழ்ந்து போகின்ற வேளையில் கண்டிப்பாக இந்த சகேயுவை மதித்திருக்க மாட்டார்கள்.ஏன் என்றால் வரி வசூல் செய்யும் ஒரு யூதன் மிகவும் கீழ்த்தரமான வேலை செய்பவனாகவும்,ரோமர்களின் எடுபிடி என்றுமே அந்த மக்கள் முத்திரை குத்தி வைத்திருந்தனர்.அவன் மிகப்பெரிய பாவியாகவே பாவிக்கப்பட்டிருந்தான்.மேலும் சகேயு ஒரு ஊழல் அதிகாரியாகவே இருந்திருக்கவேண்டும் என்பது வேத வசனத்தில் இருந்து அறியலாம்.இப்படிப்பட்டவன் இயேசுவை பார்ப்பதா என்று மக்கள் இவனை இயேசுவின் அருகில் போய்விடாமல் ஜாக்கிரதையாக தடுத்திருப்பார்கள்.

இரண்டாவது மிக முக்கிய காரணம் வேதமே நமக்கு நேரடியாக சொல்லுகிறது.இவன் குள்ளன் என்று.இதிலிருந்ட்து நாம் அறிந்து கொள்ளலாம் இயேசுவை காண முடியாத வகையில் சகேயுவின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருந்திருக்கும் என்று.

இன்றைக்கும் நம்மில் அனேகர் இயேசுவிடம் நெருங்கி வர முயற்சி செய்வது இல்லை.இதற்கு பல காரணங்களை நாம் ரெடிமேட் ஆக வைத்திருக்கிறோம்.ஆம் பிரியமானவர்களே இயேசுவை நெருங்க முடியாதவாரு பல குறைபாடுகளை பிசாசானவன் நம் வாழ்வில் வைத்திருக்கலாம்.ஆனால் இவகள் நம் நோக்கத்தை ஒரு போதும் கழைத்துப்போட்டு விடக்கூடாது.இதில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு.அது என்ன தெரியுமா? இவகளை விட்டு இயேசுவை பின்தொடரவேண்டும்.சகேயு உலகப்பிரகாரமாக இயேசுவக் காண அவர் வழியாக ஓடினான் என்று வேதம் சொல்லுகிறது

லூக்கா19:4. 
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

அவன் ஆயக்காரர்களுக்கு தலைவனாகவும்,ஐசுவரியவானக இருந்த பொழுதும் தன்னுடைய எந்தவித சுய பரிசேய எண்ணங்களுக்கும் அவன் இடம் கொடாமல் ஒரு சிறுவனை போல தனனை தாழ்த்தி இயேசுவை நெருங்கினான் என்பதை பார்க்கிறோம்.இன்றைக்கு நம்மில் எத்தனை பேருக்கு படிப்போ,வசதியோ,அந்தஸ்தோ,பதவியோ,ஜாதியோ இயேசுவைக் காண தடையாக உள்ளது.இவைகளை தூக்கி எறிந்துவிட்டு இயேசுவை நோக்கி ஓடலாமா?

4. சகேயு ஆயத்தப்பட்டான்

கடைசியாக சகேயுவின் வாழ்வீல் மிகமுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.இயேசுவை பற்றி கேள்விப்பட்ட,பார்க்க ஆசைப்பட்ட,அவரை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று பிரயாசப்பட்ட சகேயுவுக்கு ஒரு இனிமையான நிகழ்வு.

லூக்கா19:5
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு, சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.

ஆம் சகேயு எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.அவருடைய மனதின் கதநாயகனாக இருந்த இயேசு அவரை பார்த்து பேசுகிறார்.அவனுடைய வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லுகிறார்.

சந்தோஷம் அடைந்தான் சகேயு.ஆனால் ஊர்காரர்கள் ஏதோ முனுமுனுக்க அதைவிட அவன் உள் மனது அவனை அரிக்க ஆரம்பித்தது.

இன்றைக்கு இயேசுவை அறிந்து கொள்ள ஆசைபடும் நன்பா உன் மனது என்ன சொல்லுகிறது.அவர் இருதய வீட்டில் வர அது ஆயத்தமாக உள்ளதா?அல்லது ஏழைகளை ஏமாற்றியோ அநியாயமாக சம்பாதித்ததோ அதில் உண்டா?ஆணடவர் முகம் சுளிக்கும் வகையில் நம் இருதய வீடு உண்டா?அதை சுத்தப்படுத்தி இயேசுவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவோமா?இதோ இந்த சகேயு அதை செய்ய ஆயத்தமாக இருந்தான்.அவன் உண்மையான வாழ்வின் ஒளி விளக்கை வீட்டில் ஏற்றிவைக்க இதுவரை ஓளி என்று நம்பின விட்டில் பூச்சிகளை வெளியேற்ற ஆரம்பித்தான்.

லூக்கா19:8. 
சகேயு நின்று, கர்த்தரை நோக்கி, ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

Comments