மரியாள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்க பட்டவள்


மரியாள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்க பட்டவள்

லூக்கா : 1 : 28
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்

தேவதூதன் ஆண்டவரின் தாயாகிய மரியாளது வீட்டிற்கு வந்து மரியாளை வாழ்வியலையும் , சகல ஸ்திரீகளில் ஆசீர்வதிக்கபட்டவள் என்று சொன்னதை மேல் சொன்ன வசனம் தெளிவுபடுத்திக்கிறது. மரியாள் ஆசீர்வதிக்கப் பட்டதற்குரிய காரணங்களை இந்த சத்தியத்தில் கவனிக்க லாம். மரியாளின் குணாதிசயத்தை சிந்திக்கலாம். இவைகள் மற்ற பெண்களின் குணத்திற்கு முன்மாதிரியானது. பெண்களது குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மரியாள் ஒரு முன்உதாரணம். குணசாலியான பெண்ணை கண்டுபிடிக்கிறார் யார் என்று வேதம் கேள்வி எழுப்புகிறது. குணசாலியான பெண்ணுக்கு மரியாள் ஒரு முன் உதாரணம்.

1. மரியாள் தேவ கிருபை பெற்றவள்

லூக்கா 1:28
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

2. மரியாள் தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தவள்

லூக்கா 1:28
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

3. மரியாள் தேவனது வாக்குத்தத்தங்களை மனதில் வைத்து தியானித்தவள்

லூக்கா 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்

4. மரியாள் தேவ பெலனை பெற்றவள்

லூக்கா 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

5. மரியாள் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினவள்

லூக்கா 1:38
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

6. மரியாள் தேவ பிள்ளைகள்மீது அன்பு கொண்டிருந்தவள்

லூக்கா 1:40
சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

7. மரியாள் தேவனை நன்றியுள்ளத்தோடு துதித்தவள்

லூக்கா 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,

லூக்கா 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

லூக்கா 1:48
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

லூக்கா 1:49
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

லூக்கா 1:50
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

லூக்கா 1:51
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.

லூக்கா 1:52
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

லூக்கா 1:53
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

லூக்கா 1:54
நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,

லூக்கா 1:55
தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.

Comments