மாற்கு 14 :6
இயேசு அவர்களை நோக்கி, அவளை விட்டு விடுங்கள், ஏன் அவளை தொந்தரவு படுத்துகிறீர்கள்.? என்னிடத்தில் நற்கிரியைச் செய் திருக்கிறாள்.
இயேசுவால் நற்சாட்சி பெற்ற ஸ்திரி மரியாளைக் குறித்து முன் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த செய்தியில் இயேசுவால் நற்சாட்சி பெற்ற ஸ்திரி களைத் குறித்து பார்க்கலாம்.
1. இயேசுவை பரிசுத்த ஆவியினால் பெற்றெடுத்த மரியாள்
லூக்கா 1:27
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
2. இயேசுவைக் கண்டு களிகூர்ந்த அன்னாள்
லூக்கா 2:36
ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
3. இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து நல்லபங்கை தெரிந்து கொண்ட மரியாள்
லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
4. இயேசுவின் வஸ்திரத்தை தொட்டு சுகமான பெரும்பாடுள்ள ஸ்திரி
லூக்கா 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
5. இயேசுவின் உயிர்தெழுதலை முதன் முறையாக தரிசித்து சாட்சி கொடுத்த மகதலேனா மரியாள்
மாற்கு 16:9
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
6. இயேசுவுக்கு தங்கள் ஆஸ்திகளால் ஊழியம் செய்த பெண்கள்
லூக்கா 8:3
ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

Comments
Post a Comment