இயேசு கிறிஸ்துவின் அழகான அணுகுமுறை
ஆபிரகாம், யாக்கோபு இவர்களுக்கு பின் தேவனோடு விண்ணப்பத்தில் போராடிய ஸ்திரீ கானானிய ஸ்திரீ..
1. கானானிய ஸ்திரீயின் தேவை நிறைந்த கூப்பிடுதல்
கண்ணீர் சிந்தப்பட்ட மேஜை
மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
2. ஸ்திரீயின் விசுவாசத்திற்கு அஸ்திபாரமிடும் இயேசு கிறிஸ்துவின் அமைதி
கிருபையின் மேஜை
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
3. சீஷர்களின் இருமனமுள்ள வேண்டுதல்
சுகமளிக்கும் மேஜை
மத்தேயு 15:23
அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
4. ஸ்திரீயின் விசுவாசத்திற்கு அஸ்திபாரமிடும் முதல் பதில்
விசுவாசத்தின் மேஜை
மத்தேயு 15:24
அதற்கு அவர்: காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
5. ஸ்திரீயின் வேண்டுதல் இப்பொழுது தொழுகையாக மாறுகிறது
விரும்பியதை அளிக்கும் மேஜை
மத்தேயு 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
6. ஸ்திரீயின் விசுவாசத்திற்கு அஸ்திபாரமிடும் இரண்டாவது பதில்
ஐக்கியப்படுத்தின மேஜை
மத்தேயு 15:26
அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
7. ஸ்திரீயின் விசுவாசம் எஜமானின் மேஜையை நோக்கிப் பார்க்கிறது
அந்த மேஜை கிறிஸ்துவே
மத்தேயு 15:27
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

Comments
Post a Comment