உனக்கு இளைப்பாறுதல் தருவேன்
யாத்திராகமம் 33.14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், *நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்* என்றார்.
மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
இந்த இளைப்பாறுதல் இரட்சிக்கப்படுதல் ஆகும்.
இந்த இளைப்பாறுதல் இரட்சிப்பின் நிச்சயத்திற்கு அடையாளம்..
இந்த இளைப்பாறுதல் ஒரு முறை நடைபெறுகிறது..
இந்த இளைப்பாறுதல் கிறிஸ்து இலவசமாக தருகிறார்..
இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தால் போதும்
அனுதின இளைப்பாறுதல்
உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்
எரேமியா 6.16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது *உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்* என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
மத்தேயு 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
இந்த இளைப்பாறுதல் பரிசுத்தமாகுதல் ஆகும்
இந்த இளைப்பாறுதல் இரட்சிப்பின் சந்தோசத்திற்கு அடையாளம்..
இந்த இளைப்பாறுதல் அனுதினமும் நடைபெறுகிறது..
இந்த இளைப்பாறுதல் கிறிஸ்துவிடம் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்
இயேசு கிறிஸ்துவின் நுகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்..
இயேசு கிறிஸ்துவினிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் .
நல்ல வழியில் நடக்க வேண்டும்

Comments
Post a Comment