நீங்கள் தேவனால் என்றுமே மறக்கபடுவதில்லை


லூக்கா 12:6
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.

லூக்கா 12:7
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

1) தாய்,தகப்பன் உங்களை  மறந்தாலும் தேவன் மறப்பதில்லை

ஏசாயா 49:14
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

ஏசாயா 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

ஏசாயா 49:16
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

2) நண்பர்கள் மறந்தாலும் தேவன் மறப்பதில்லை

யோபு 19:14
என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.

3) உங்களால் உதவி யடைந்தவர்கள் உங்களை  மறக்கலாம் ஆனால் தேவன் உங்களை மறப்பதில்லை

4) ஏழைகள், திக்கற்றவர்களை தேவன் என்றைக்குமே  மறப்பதில்லை

சங்கீதம் 9:18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

5) எல்லாரும் உங்களை மறக்கலாம், ஆனால் தேவன் மறப்பதில்லை

சங்கீதம் 31:12
செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.

ஏசாயா 44:21
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

6) அழுது கண்ணீரோடு  கர்த்தரை தேடுகிறவர்களை அவர் மறப்பதில்லை

எரேமியா 50:4
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 50:5
மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

7) தேவனுக்காக நீங்கள் படும் பிரயாசங்களையெல்லாம் அவர் மறப்பதில்லை

எபிரெயர் 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

Comments