பொறுமையினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்


1) ஜெபம் கேட்கப்படும் 

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

2) பொறுமையினால் பாடுகளை சகிப்போம் - வெளி 2:3

வெளி 2:3
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

3) பொறுமையாக இருந்தால் சோதனை காலத்தில் கர்த்தர் நம்மை காப்பார்

வெளி 3:10

என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

4) பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்க பண்ணலாம் - நீதி 25:15

நீதிமொழிகள் 25:15
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

5) பொறுமை ஆவியின் கனிகளில் ஒன்று - கலா 5:22

கலாத்தியர் 5:22
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

6) பொறுமையுள்ளவன் உத்தமன் 

பிரசங்கி 7:8
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

7) பொறுமையினால் ஆவிக்குரிய ஜீவியத்தில் பலன் கொடுப்போம்

லூக்கா 8:15
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

8) பாக்கியவான்களாகிறோம் (ஆசிர்வதிக்கபடுவோம்) 

யாக்கோபு 5:11
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

9) பொறுமையினால் வாக்குத்தத்தங்களை (ஆசிர்வாதங்களை) சுதந்தரிப்போம் 

எபிரெயர் 6:11
நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,

10) வசனத்தை கேட்டு பலன் கொடுக்கிறோம் - லூக் 8:15

லூக்கா 8:15
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

Comments